செங்கல்பட்டு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு கனமழை எச்சரிக்கை காரணமாக 30.11.2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நேர்முகத் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. எதிர்வரும் 07.12.2024 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் புதிய வாசுகி திருமண மண்டபம், திருப்போரூர் கூட்ரோடு, வல்லம், செங்கல்பட்டு 603 003 என்ற முகவரியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. அது சமயம் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.